a K.Vijay Anandh review
ஜுனியர் எம் ஜி ஆரின் நடிப்பில் இரும்பன் வெளிவந்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல், எம் ஜி ஆரின் ஹிட் பார்முலாவை அப்படியே பிரதிபலித்திருக்கின்றார்கள்.
நரிக்குறவர் சமூகத்தில் ஆபீஸ் என்கிற பெயரில் நாயகன் ஜூனியர் எம் ஜி ஆர். அவருடன் சுவராஸ்யமான பெயர்களில் நண்பர்களாக யோகிபாபு, சென்றாயன் போன்றோர்.
சிறுவயதிலிருந்தே சமூகசேவைகளில் நாட்டமுடிய நாயகியாக ஐஸ்வர்யா தத்தா. அவரது சொத்துக்களையும் அபேஸ் செய்ய முடிவெடுத்து அவரை துறவியாக்க பார்க்கும் அவரது அக்கா மாப்பிள்ளை.
ஜூனியர் எம் ஜி ஆர் – ஐஸ்வர்யா தத்தா இடையிலான காதல் ஜெயித்ததா என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
திருட்டு, காதல், கலாட்டா, காமெடி என்று பயணிக்கும் முதல்பாதி இரும்பன், கடற்பயணம் காடுகள் என்று இரண்டாம் பாதியில் அட்வெஞ்சர் அவதாரம் எடுக்கிறது. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது.
முன்பே குறிப்பிட்டபடி, அக்மார்க் எம் ஜி ஆர் பார்முலா, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... பாடலை ரீமிக்ஸ் செய்தவிதமும் அருமை.
இரும்பன், எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு பிடிக்கும்!