a K.Vijay Anandh review
ஆமா.. யாரு பாரதமாதா.. அப்பாவுக்கு காட்டவே மாட்டேங்கிறியே... என்று யோகிபாபு கேட்கும் போதெல்லாம் நாந்தாம்பா பாரத மாதா...என்று கண்களை சிமிட்டி அழகான ஒரு புன்னகை பூக்க சொல்கிறாளே ஸ்ரீமதி, அழகு...
கிண்டலுக்காக வைத்திருக்கிறார்களா..? வன்மத்திற்காக வைத்திருக்கிறார்களா. ? என்பது தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குநர் ஷான் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் எனினும் அவனவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு என்று லெஜண்ட் வடிவேலு சொல்கிற மாதிரி இது ஒரு நேர்மறை சிந்தனையை படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் விதைக்குமானால் நல்லதுதானே! அதைத்தானே RSS உம் சொல்கிறது..? சிறுமியரெல்லாம் தேவியின் வடிவமென்று.. அப்படியாச்சும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறையட்டுமே!
ககலாய்த்தல், கவுண்டர் டயலாக்கில் காமெடியில் வெளுத்து வாங்குதல் என்று எதுவுமே இல்லாமல் ஒரு அன்பான அப்பாவி அப்பா இன்னொரு அப்பாவி அம்மா சுபத்ராவின் அன்பான கணவன் ஒரு முதலாளியின் கீழ் டீக்கடையில் வேலை பார்க்கும் நான் அன்றாடம் சந்திக்கும் நபராக யோகிபாபு வாழ்ந்திருக்கிறார். காமெடி சட்டையை அவிழ்த்துவிட்டு இன்னொரு சட்டை போட்டுக்கொள்ளும் போது அதற்கேற்றார்ப்போல் உடல்மொழிகளில் இன்னும்.கொஞ்சம் மெனக்கெடவும் வேண்டும். அதையும் சரிசெய்துகொண்டால் தவிர்க்க முடியாத நடிகராக அவர் விரும்பும் வரை வலம்வரலாம்.
சுபத்ரா, மாடர்ன் மங்கையாக, அப்பாவி மனைவியாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக பொருந்தி போகிறார்.
மெட் ராஸ் படத்திலேயே ஹரி அழுத்தமான முத்திரை பதித்துவிட்டார் இந்தப்படத்தில் ஆதரவற்ற அந்த போராளி கிழவிக்கு அந்த வாய்ப்பை விட்டு கொடுத்துவிட்டார் போலும். அந்த போராளி.பாட்டி கவனம்.ஈர்த்திருக்கிறார்.
தாழ்ந்த சாதிக்கார வைப்பாட்டிக்கு பிறந்த தம்பி என்பதற்காக யோகிபாபுவை ஒரு அடிமை.மாதிரி நடத்தும் அருள்தாஸின் மீது கோபம் வருகிறது. ஒரு கட்டத்தில் அப்பா ஜி எம் குமார் கொடுக்கும் அறை அவரை மனிதனாக.மாற்றுகிறது.
அரசு மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரி ஆகியோர் குழந்தை யை விசாரிக்கும் போது காக்கிச்சட்டயை கழட்டிட்டு வரச்சொல்வது வசீகரிக்கும் காட்சிகள்.
தாழ்ந்த சாதிப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் மதம்மாறிவிடாமல் மகனுக்கு வேலு.என்றும் பேத்திக்கு குலதெய்வமான பொம்மை.நாயகி என்றும் பெயர் வைத்து அழகு பார்க்கும் கம்பீர தாத்தாவாக ஜி.எம் குமாரும் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார்.
மஹிமா நம்பியார் கால்ஷீட் கிடைக்கலயா, சுமயா இருக்காப்ல என்று யோசிக்கவைக்கிறார் ஸ்ரீமதியின் டீச்சராக வரும் சுமயா, தொடர்ந்து நடிக்கலாம்.
இயக்குநர்களும் நடிகராகும் காலம், GP ராஜு உள்ளிட்ட தனது சக இயக்குநர் நண்பர்களை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் ஷான்.
குறிப்பாக, நீதிபதியாக வரும் எஸ் எஸ் ஸ்டேன்லி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிக இயல்பாக இருக்கின்றன.
ஒரு பக்கம் அம்பேத்கர் எழுதின சட்டத்தால் சாமான் யனுக்கு நீதி கிடைக்காமலும் இல்லை. அதே சட்டத்தால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்காமல் இல்லை.ஆகவே, சுதந்திர இந்தியாவுக்கான சட்டம் எழுதப்படவேண்டிய அவ்சியத்தையும் இப்படம் மறைமுகமாக வலியுறுத்தவும் தவறவில்லை.
பார்க்கும் குழந்தைகளை, வாழும் பாரதமாதாவாக நினைத்துக்கொண்டால் அவர்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நிச்சயம் இல்லாமல் போகலாம்.