a K.Vijay Anandh review
கிறுத்துவம், இஸ்லாம் இன்னொரு பக்கம் கம்யூனிசம் என்று மும்முனைகளும் கோலோச்சும் கேரளாவிலிருந்து சுவாமி ஐயப்பனை போற்றி இப்படி ஒரு படம் வந்திருப்பதும் தமிழகத்தை போல கேடுகெட்ட திரையரங்க அரசியல் இல்லாத கேரளாவில் அப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருப்பதும் அப்படத்தின் கதை, திரைக்கதை போன்றவற்றையெல்லாம் தாண்டிய ஒரு தெய்வீக அதிசயம்.என்றால் அதுமிகையல்ல.
பெண்குழந்தைகள் வயதிற்கு வந்துவிட்டால் சபரிமலை சென்றுப் சுவாமி ஐயப்பனை தரிசில்க 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். ஆகவே சிறுமியாக இருக்கும் போதே ஒரு முறையாவது சுவாமி ஐயப்பனை தரிசித்து விடவேண்டும் என்கிற தேவநந்தாவின் தவிப்பே மாளிகாபுரம்.
மாலை அணியும் பெண்குழந்தைகள் பெண்கள் எல்லோரையும் மாளிகாபுரத்தம்மனாக வழிபடும் பாவிக்கும் கேரளாவின் கலாச்சாரம் போற்றத்தக்கது. அதுவும் அந்த மாளிகாபுரத்தம்மன் வேறு யாருமில்லை, நமது பாண்டிய அரசர்களால் கொண்டு செல்லப்பட்ட மீனாட்சி அம்மனே என்றறியும் போது மெய்சிலிர்க்கிறது.
அப்படி ஒரு குட்டி மீனாட்சி அம்மனாகவே துறுதுறுவென்று வலம் வருகிறாள் தேவ நந்தா. அவளது தோழனாக ஸ்ரீபத், சுட்டியும் துறுதுறுப்புக்மாக அவனும் நம்மை கட்டிப்போடுகிறான்.
மிரட்டும் வில்லனாக, சம்பத் ராம், கலியுகத்தில் ஐயப்பனிடம் அடிவாங்கும் அசுரனாக அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
உன்னிமுகுந்தன், தேவநந்தாவின் பார்வையில் மட்டுமல்ல இனி அனைவரின் பார்வையிலும் சுவாமி ஐயப்பனாகவே நினைவில் நிற்பார். காட்டிற்குள், அரிவராசனம் கேட்டு சட்டென தூங்கிப்போகும் போது அதுவும் ஐயப்பன் அமர்வது போன்றே ஒரு யோக நிலையில் தூங்கிப்போகும் போது நிஜமாகவே ஐயப்பனாக தெரிகிறார்.
கடவுள், எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுப்பார், ஏனென்றால் ஆத்மா இருக்கும் இடம் கடவுள் இருக்குமிடம் தானே!
இப்படி ஒரு காலகட்டத்தில் ஒரு அவசிய தேவையாக இந்தப்படத்தின் கதையை எழுதியிருக்கும் அபிலாஷ பிள்ளை அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வி பிரபாகர் இப்படத்தை இயக்கியிருக்கும் விஷ்ணு சசி சங்கர் ஆகியோருக்கு பாராட்டுகள்.
தமிழக சிறுவர்களையும் சபரிமலைக்கு ஈர்க்கும் பொருட்டு தமிழிலும் வெளிவந்திருக்கும் மாளிகாபுரத்தை பார்த்து கொண்டாடுங்கள்.