a K.Vijay Anandh review
ஒரு சவாரி, அதற்குள் அதிபயங்கரமான ஒரு பிளாஷ்பேக் மற்றும் பழிவாங்கல் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் டிரைவர் ஜமுனா, ஆச்சிரியப்பட வைக்கிறது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்களாக நயந்தாராவும் திரிஷாவும் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஜூனியர் லேடி சூப்பர் ஸ்டார் படத்திற்கு தகுதியானவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப்படம் மூலம் மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
வாடகை வாகன ஓட்டு நராக இருந்துகொண்டும்,தான் வசிக்கும் பகுதி மக்களின் அன்பை பெற்றவருமான தனது தந்தையின் இழப்பு, அதனை தொடர்ந்து புத்திபேதலித்து போகும் அம்மா, தம்பி ஆகியோரை காப்பாற்ற அப்பாவின் கார் சாவியை தன் கையில் எடுத்து வாடகை கார் ஓட்டு நராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிப்பவராக மிளிர்கிறார்.
அப்படி ஒரு நாளில், கூலிப்படை கும்பல் அவரது வண்டியில் சவாரிக்கு வருகிறது. அதில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் அதிலிருந்து அவர் எப்படி மீளப்போகிறார் என்று நினைக்கும் போது, அவர் கூலிப்படையிடம் மாட்டவில்லை, அந்தக்கூலிப்படைதான் அவரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாக அமைந்த கின்சிலினின் திரைக்கதை பிரமிக்கவைக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
இரண்டு மணி நேர, திகில் மற்றும் ஆக்ஷன் அட்வெஞ்சர் ரெய்டாக டிரைவர் ஜமுனா ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.