a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, The Boys.
மது அருந்திவிட்டு வாகனம் எடுத்துக்கொண்டு வரும் ஒரு நபரை நான்கு பாய்ஸ் கடத்துகிறார்கள். அதற்கு முன், அவரை கடத்தவேண்டும் என்கிற செய்தியுடன் அந்த நபரின் புகைப்படம் அனுப்பப்படுகிறது. ஏன்..? எதற்கு..? கடத்துகிறார்கள் என்பதை ஒரே காட்சியில் நச்சுனு சொல்லியிருக்கிறார் இயக்குநர் மா. சங்கரசுப்ரமணியன். சு.சந்தனமாரியப்பனின் ஒளிப்பதிவும் அருமை.
The Boys, குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது மது அருந்தி உயிரைமாய்த்துக்கொள்ளாதீர், அவர்களின் படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை இரண்டே காட்சிகளில் எளிமையான வசனங்கள் மூலம் புரிய வைத்த விதம் அருமை.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You