a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, ஸ்கூலுக்கு போலாமா.
கண் தெரியாத தனது அம்மாவையும் காப்பாற்றவேண்டும், பசியையும் போக்கவேண்டும், இந்த சிறுவன் முரளி என்னதான் செய்வான். கார்களை துடைப்பது, கிடைக்கும் வீட்டுவேலைகள் செய்வதுமாக வாழ்க்கையை ஓட்டுகிறான். அப்படி அவன் வாழ்க்கையில் சந்திக்கும் அண்ணாமலை என்பவர், அவனது நிலையறிந்து அரசு பள்ளிகளில் கிடைக்கும் பாடப்புத்தகங்கள், சைக்கிள் முதல் உணவு வரை எடுத்துக்கூறி அவனை பள்ளியில் சேர்க்க ஆவண செய்கிறார்.
சீருடை எடுக்க கடைக்கு போகும் போது மனதை கலங்கை வைத்துவிட்டார் இயக்குநர் எம் சந்திரசேகர். ஆம், அது முரளி அல்ல செல்வி என்கிற உணமை தெரியும் போது அண்ணாமலை போலவே அனைவரும் ஷாக் ஆவார்கள். வேலையும் கிடைக்கவேண்டும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டுமென்பதற்காக கண் தெரியாத அம்மா அவளை ஆண் வேடமிட வைத்திருப்பார். எஸ் அனிஷ், அட்டகாசமாக நடித்திருக்கிறான். மகிபாலனின் ஒளிப்பதிவும் அருமை.
ஸ்கூலுக்கு போலாமா, நாம் சந்திக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு பள்ளியையாவது அடையாளம் காட்டுவோம்!
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You