a K.Vijay Anandh review
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்ந்த வாழ்க்கை வரலாறுதான் என்பது போல, விடிவி கணேஷை வைத்து நான் கடவுள் ராஜேந்திரனிடம் சொல்லப்படுவதாக அமைந்த வரலாறு முக்கியம் கதை கொஞ்சம் சுவராஸ்யமாகத்தான் இருக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
வழக்கம்போல வேலைவெட்டி இல்லாத நாயகனாக ஜீவா, கச்சிதமாக நடித்திருக்கிறார். அவருக்கு கிடைக்கும் ஒரே வேலை, நாயகி காஷ்மிரா பர்தேசியை விழுந்து விழுந்து காதலிப்பதுதான். கேரளப்பெண்ணாக வரும் கஷ்மிரா பர்தேசி, அழகான நாயகியாக தமிழ் சினிமாக்களில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சரண்யா பொன்வண்ணனை அம்மாவாக பார்ப்பது நன்றாக இருக்கிறது, வழக்கம்போல, ஜொலித்துவிடுகிறார். ஒரு மேல் நடுத்தரவர்க்க அப்பாவாக கே எஸ் ரவிக்குமாரும் சிறப்பாக வந்துபோகிறார்.
தன்னுடைய பலான பலான கதைகளையே சொல்லி விடிவி கணேஷும் வழக்கம்போல கலகலப்பூட்டுகிறார்.
கடைசில், ஜீவாவையும் பெண்வேடமிட்டு நடிக்க வைத்து ரசித்திருக்கிறார், இயக்குநர் சந்தோஷ் ராஜன்.
லவ் டுடேவுக்கு முன்னாடி வெளியாகியிருந்தால், வரலாறு முக்கியம் ரசிகர்களிடையே இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே சென்று சேர்ந்திருக்கலாம்.
வரலாறு மட்டுமல்ல, திரைக்கதையும் முக்கியம் என்று நினைத்து இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!