a K.Vijay Anandh review
சந்திரபாபு, எம் ஜி ஆர் - சிவாஜி என்று இருபெரும் ஆளுமைகள் கோலோட்ச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களையும் மீறி ஒரு தனித்துவமான - ஒரு ஸ்ட்ரைட் பார்வர்ட் நடிகர் - அதாவது அவருக்கு தோன்றியதை செய்யும் நடிகர் என்று பெயர் வாங்கியவர். மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுக்கொடுக்கவேண்டுமா என்பது போல சந்திரபாபுவின் பேரனான இந்த மீனவ இளைஞன் சாரத்துக்கு தனித்துவமாக செயல்பட்டு காட்ட சொல்லியும் கொடுக்கவேண்டுமா..? தமிழ் சினிமா என்றாலே இன்னார் சிலைகள் தான் என்று இருக்கும் காலகட்டத்தில் சிங்காரவேலர் சிலையை காட்டி ஒரு பாட்டும் பாடி அசத்தியிருக்கிறார். சத்துணவு திட்டத்திற்கு முன்னோடியாக, சென்னையில் இவர் அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவுதிட்டம் இருந்திருக்கிறது.
இன்னொன்று, திரைக்கதை ஆரம்பிக்கும் விதமும் வழக்கத்திற்கு மாறாக மாறுபட்டு ஏதோ இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு கொலை வழக்கில் கைதாகும் சாரத்தை விடுதலை செஞ்சுடாதீங்கன்னு கவுன்சிலர், சாதிக்கட்சிக்காரன், அமைச்சர் என்று ஆளாளுக்கு போன் செய்யும் போதே, அட அப்படி யாருய்யா இந்த சாரத் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
சாரத்திற்கும் போன் செய்த ஒவ்வொருவருக்குமான முட்டல்கள் மோதல்கள் திரைக்கதையாக விரிகிறது
அவர்கள் விரித்த வலைக்குள் மாட்டிக்கொண்டு அவர்களையே கூண்டோடு ஒழித்து கட்டி வலையை கிழித்து கொண்டு சுறாவைப்போல வெளியே வருகிறார் சாரத்.
சாரத், வசன உச்சரிப்புகள் மற்றும் உடல் மொழியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இது வேற லெவல் படமாகியிருக்கும்.
முருகா பிடிச்சுருக்கு படங்களில் பார்த்த அதே துறுதுறு அசோக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் பார்க்க முடிகிறது. பரணியும் வினோத்தும் சாரத்தின் நண்பர்களாக அசோக்குடன் பயணிக்கிறார்கள்.
அனேகா, அழகான டீச்சர் நாயகியாக வசீகரித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில் ஒரு மாஸ் படத்திற்கு தேவையான ஹீரோ அறிமுக பாடல் , டூயட் சண்டைக்காட்சிகள் என்று நிறையவே இருந்தாலும் பட ஆக்கத்தில் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் தெற்கத்திவீரன் ஒரு தேர்ந்த வீரனாக ஆகியிருப்பான்