a K.Vijay Anadh review
நான் அழகா இருக்கேன்ல... இந்த வார்த்தையை ஒரு திகில் நிறைந்த வார்த்தையாக்கி பயமுறுத்தியிருக்கிறார்கள் காட்டேரி குழுவினர்.
இரண்டு நாளில் பணத்தை கொடுக்கவில்லையென்றால் தூக்கிடுவேன் என்று முக்கிய வில்லன் மிரட்ட, பெயரே தெரியாத அந்த வில்லனின் பெயரை சொல்லி அழைத்து அவன் கேட்ட பணத்துடன், அவனது பழைய பாவக்கணக்கையும் சேர்த்து காட்டேரியாக அவிழ்த்து விடுகிறார் வைபவ்.
வைபவிற்கு, இது போன்ற கதைகள் அல்வா சாப்பிடுவது போல அல்லது எந்த நடிகரையும் இது போன்ற கதைக்குள் பொருத்து அழகுபடுத்தி பார்ப்பது இயக்குநர் டிகேக்கு அல்வா சாப்பிடுவது போல எனலாம்.
முதலிரவைப் பற்றி சின்னப்பையனிடம் பேசக்கூடாது என்றால் வேஸ்டுனு நினைக்கிறாய்ங்க, பேசினால் கன்னத்துலயே அறையுறாய்ங்க...வைபவின் ஆரம்பக்கட்ட காட்சிகள் அமர்க்களம். அந்த சுவராஸ்யத்தை படம் முழுவதும் கடத்திவிடுகிறார்.
சோனாம் பாஜ்வா வைபவிற்கு வாக்கப்பட்ட ஹீரோயின், வைபவ் கேங்கிடம் மாட்டிக்கொண்ட ஹீரோயின் இருவருமே சிறப்பாக நடுத்திருக்கிறார்கள் என்றாலும் ஆத்மிகா கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான் அழகா இருக்கேன்ல என்கிற டயலாக்கை அப்பாவியாக கேட்கும் வரலட்சுமியை எப்படி.காட்டேரியாக்குகிறார்கள் என்பதே மிகவும் வித்தியாசமான பிளாஷ்பேக்.
காடேரி விஷயத்துல கூட டபுள் மீனிங்ல விளையாடியிருக்கிறார்கள், கிணற்றை காயப்போடாதே!
அப்படி.ஒரு கிணறு நம்மூர் அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருந்தால், தமிழ் பேசவோ தமிழ் படம் தயாரிக்கவோ ஒரு தமிழனும் இருந்திருக்கமாட்டான். அப்படி ஒரு கிணறு இலங்கையில் கூட இல்லை தானே! என்ன டேஷுக்கு ஈழத்தமிழர்களை கொன்று குவிச்சாய்ங்க!
அப்படி என்ன ஸ்பெஷல் யா அந்த கிணற்றுக்கு, அதை தெரிஞ்சுக்க நீங்க காட்டேரி படத்துக்கு தான் போகனும்!
ரவிமரியா, கருணாகரன், குட்டிகோபி இந்த மூவர் கூட்டணி அடிக்கும் அடல்ட் காமெடிகள் - கொஞ்சம் பிசிறினால் அருவருப்பில் முடிந்திருக்கும்.
இந்த பொன்னம்பலத்துல அது இருக்கோ இல்லையோ ஆனா, இன்னும் ஒரு ஸ்கிரீன் மேஜிக் இருக்கு, வந்தாலே செமயா எண்டெர்டெயின் பண்ணிட்டு போய்டுறார்.
காட்டேரி அடல்ட் ஹாரார் காமெடி