கமலியால் பெருமை -'கயல்' ஆனந்தி
கயல் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஆனந்தி, மிகக்குறுகிய காலத்தில் தான் தேர்ந்தெடுத்து நடித்த அற்புதமான கதாபாத்திரங்கள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் நிரந்த இடம் பிடித்துவிட்டார் என்றே கூறவேண்டும். எந்தளவுக்கு என்றால், இயக்குநர்கள் இவருக்காகவே கதை எழுதி காத்திருக்கும் அளவிற்கு!
ஆம், இயக்குநர் லிங்குசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராஜசேகர் துரைசாமி, தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரு கதை எழுத, அதற்கு ஆனந்திதான் பொருத்தமாக இருப்பார் என்று காத்திருந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். பெண்குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதில் இருக்கும் பாரபட்சங்களை முறியடித்து ஒரு கிராமத்துப் பெண் கல்வியில் எப்படி சாதித்து அவரது கிராமத்திற்கே பெருமை சேர்க்கிறாள் என்பதை படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு உந்துதல் கொடுக்கும் வண்ணம் இயக்கியிருக்கிறாராம் ராஜசேகர் துரைசாமி.
‘“ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து தயாரித்திருக்கிறோம்..” என்று ஒருமித்த குரலில் கூறினார்கள் தயாரிப்பாளர்கள் துரைசாமி மற்றும் குமணன்.
இப்பட அனுபவத்தை பற்றி பேசும் போது, “சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன். பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவது குறைந்திருப்பது கிராமப் புறங்களில் தான். நாம் அனைவரும் உலகத்திற்குள் அடங்கிய கிராமம் தான்.
நான் எப்போதும் என்னுடைய அறையில் அமர்ந்துதான் பாடல்கள் எழுதுவேன். ஆனால், இப்படத்திற்கு இயக்குநர் அறையில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
'நீரில் மின்னல்களாய்' என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த வரி. என்னைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகள் காட்சியிலும், கேட்பதற்கும் அர்த்தம் மிகுந்ததாக ஒரு பாதிப்பு இருக்க வேண்டும் என்றார். மற்ற கவிஞர்கள் யுகபாரதி, மதன் கார்க்கி எழுதிய படல்களும் மிகவும் பிடித்திருந்தது...”என்றார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
நாயகியின் தோழியாக நடித்திருக்கும் ஸ்ரீஜா, ”தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னை சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது. இந்த தருணத்தில் 'நக்கலைட்ஸ்' யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்த பாத்திரத்தை என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டு நடித்தேன்..” என்றார்.ஆனந்தியின் அம்மாவாக நடித்திருக்கும் ரேகா சுரேஷ், “பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்படத்தில் இயக்கு நரின் முழு வழிகாட்டுதல் படி ஆனந்தியின் அம்மாவாக நடித்ததில் மிகவும் பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட அற்புதமாக கதாபாத்திரமாக ராஜசேகர் துரைசாமி அதனை வடிவமைத்திருந்தார்..” என்றார்
நேர்மறையும் எதிர்மறையும் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புதுமுகம் அபிதா. இமான் அண்ணச்சியும், நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
”இப்படத்தின் பள்ளி, மற்றும் கல்லூரி காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். குறிப்பாக காதல் காட்சிகள் வெகுளித்தனமாக இருக்கும்.கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும்..” என்றார் படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்
தீனதயாளன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர் பிரதாப் போத்தன், “ ஒரு நோபல் காதல் கதையில் நடித்த திருப்தியைக் கொடுத்தது..” என்றார்.
ஆனந்தி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, “என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்..’” என்றார்.
மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் படத்தை வெளியிடுகிறார்.
திருச்சி பச்சமலைச் சேர்ந்த இயக்குநர் ராஜசேகர் துரைசாமியின் பெண் உருவம் தான் தலைக்காவிரி கமலி கதாபாத்திரம் என்பது குறிப்பிடதக்கது.