3 மணிநேரத்திற்குள் , எந்தவொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் அடக்கிவிடும் ஆற்றல் சினிமாவிற்கு உண்டு. இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் அமைத்துக்கொள்கின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிக்காகப் போராடும் நேர்மையான காவல் துறை அதிகாரி, கொடூரமான வில்லன் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.
" அவரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. கலையின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பே அவரைக் கடுமையாக உழைக்க வைக்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும், இத்திரைப்படத்தில் அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கிறேன்..” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.
புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், "சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய " வெட்னஸ்டே" பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.
இத்திரைப்படத்திருக்கு ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்தப்படவிருக்கின்றன. எடிட்டர் ரூபனின் உதவியாளர் சரத் எடிட்டிங் செய்ய. தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். " யாமிருக்க பயமேன்" புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.