வடசென்னை பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட தனுஷ், "பாலுமகேந்திர இயக்கிய அது ஒரு கனா காலம் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிமாறன், தான் முதலாவதாக இயக்கவேண்டும் என்று நினைத்த கதை வட சென்னை.
அந்த நேரத்தில், அவர் திரைக்கதையையும் முழுமையாகத் தயார் செய்திருக்கவில்லை. எனக்கான வியாபாரமும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் அளவில் இல்லை...
அதன் பின், பொல்லாதவன், ஆடுகளம் இயக்கிநார். ஒரு சிறந்த இயக்குநருடன் ஒரு படம் செய்வது அதிஷ்டம் எனலாம், அடுத்தடுத்து இரண்டு படம் செய்வது கொடுப்பினை. ஆனால், மூன்றாவதாக இணைவது என்பது நிச்சயமாக இறைவன் அருள் தான். அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சிம்புவை வைத்து இந்தப்படம் இயக்கப் போகிறேன். ஒரு 30 நிமிடம் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் என்னைஎன்னை நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவு பெருந்தன்மை இல்லை சாமி, என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
ஆனால், அந்த ஸ்கிரிப்ட் என்னையே வந்து சேர்ந்துவிட்டது.
வட சென்னை, ஒரு ஆயிரம் பக்க திரைக்கதை. முழுமையாக எடுத்துமுடித்தால் குறைந்தது 8 மணி நேரம் ஓடும்.
அப்படி ஒரே படமாகக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால், மூன்று பாகமாக வெளியிட இருக்கிறோம், வணிக நோக்கத்திற்காக அல்ல..." என்றார்.